இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்!

Photo of author

By Rupa

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்!

Rupa

Stalin and Palaniswami are the same in this matter! DTV Dhinakaran's tweet condemning the Vidya government!

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்!

திமுக ஆட்சிக்கு வருவதற்கு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சி ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை பெண்களுக்கான ஆயிரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் தற்பொழுது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை பரிசீலனை செய்து வருவதாக மட்டுமே கூறினர்.

இது போல பல வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்துவிட்டு தற்பொழுது திமுக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வருகிறது. திமுக விடியலை தருவது போல இல்லை. விடிய அரசியல் தான் தற்பொழுது தமிழகத்தில் நடந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அத்யாவசிய பொருட்கள் முதல் அனைத்து விலைவாசியும் ஏறிவிட்டது என்பது மக்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் டிடிவி தினகரன் திமுக தான் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாததையடுத்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் முதியோருக்கு வழங்கும் ஓய்வூதிய திட்டமாக ரூ. ஆயிரத்திலிருந்து ரூபாய் 1500 ஆக வழங்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் திமுக அரசோ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக ஓய்வூதியம் வழங்கும் தொகையை குறைத்து வருகிறது. புதிய வயது முதிர்ந்தோர்க்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இது அவர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். கடந்த ஆட்சியில் இருந்த பழனிசாமி அரசு தான் இந்த பாவத்தை செய்தது என்றால் தற்பொழுது இந்த திமுக அரசும் அதையே பின் தொடர்கிறது. இது வருத்தத்திற்குரிய விஷயமாகும். அவ்வாறு பார்க்கும் பொழுது மக்களை வஞ்சிப்பதில் எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் ஒன்றுதான் இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவை எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார்.