சத்துணவு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சத்துணவு அமைப்பாளர் சமையல் உதவியாளர் போன்ற எல்லோரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அங்கீகரித்து ஊதியம் வழங்க வேண்டும் எனவும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்றையதினம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள். நாகர்கோவிலில் 250திற்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள். அதேபோல தூத்துக்குடியில் 500க்கும் மேற்பட்டவர்கள் ,கடலூர் மாவட்டத்தில் 40 க்கும் மேற்பட்டவர்கள், காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் என்று திருப்பூர், கோவை, போன்ற மாவட்டங்களிலும் இதற்காக போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்காக, கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசு தேர்தல் களம் நெருங்கி வரும் காரணத்தால்தான் போட்ட வழக்குகளை எல்லாம் திரும்பப் பெறுவதாக நாடகமாடுகிறது. அதோடு உரிமைக்காக போராடுவோரை கைது செய்து அவர்களின் நியாயமான கோரிக்கையை கொச்சைப் படுத்துகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
நீலகிரி, திருப்பூர்,கோவை, போன்ற பல மாவட்டங்களைச் சார்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை ,குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக அங்கீகரித்தல், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை செய்தவரும் அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்காமல் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்திருக்கிறார்.
அவர்களின் உரிமைக்காக போராட்டம் நடத்துவதற்கு என்னுடைய ஒரு அன்பான வேண்டுகோள் உங்களின் வேண்டுகோளுக்காக செவிசாய்க்காமல் இருக்கும் அதிமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதை நிறுத்துங்கள். உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.