கடுப்பைக் கிளப்பிய முக்கிய கட்சி! கடுப்பில் அதிமுக!

0
94

சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டது கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 25 சீட்டுகள் வரை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தச்சநல்லூர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவின் மாநில தலைவர் முருகன் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு இலக்க எண்ணிக்கையில் சட்டசபைக்கு போவார்கள் என்று தெரிவித்தார்.

அதேபோல திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நயினார் நாகேந்திரன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார் எனவும், அவர் திருநெல்வேலியின் கதாநாயகன் என்றும், அவர் தெரிவித்தார். தொகுதி பங்கீடு இதுவரையில் இறுதி செய்யப்படாத நிலையில், பாரதிய ஜனதா கட்சி இவ்வாறு சொல்லியிருப்பது ஆளும் கட்சியான அதிமுக தொண்டர்கள் இடையே சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

அதேபோல நடிகை குஷ்புவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக எந்த தொகுதியை கொடுப்பீர்கள் என்று அவருடைய ஆதரவாளர்கள் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக இருந்து வரும் குஷ்பூ அங்கே போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது.