சேலத்தை தட்டித் தூக்க போகும் ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடியார்!

Photo of author

By Rupa

சேலத்தை தட்டித் தூக்க போகும் ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடியார்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்த சட்டமன்றத்தேர்தலில் இரும் பெரிய கட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை அமைத்துக்கொண்டது.இந்த கூட்டணி கட்சிகளால் தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.இரு பெரிய மூத்த தலைவர்களுக்கு பிறகு மோதும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும்.இந்த தேர்தலை இன்னும் பரபரப்பாக்கும் விதத்தில் பல ஊடகங்கள் தேர்தல் கருத்து கணிப்பை எடுத்து வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் விகடன் தனது கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.அதில் சேலத்தில் எடப்படியார் நிற்கும் அவரது சொந்த தொகுதியை தவிர்த்து மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்ற கருத்து கணிப்பை வெளியிட்டதால் அதிமுக தலைவர் மற்றும் முதலமைச்சரான பழனிசாமி அவருக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

அதனையடுத்து திமுக சார்பில் சேலம் மாநகராட்சியில் முன்னால் மேயர் ரேகா பிரியதர்ஷினி போட்டியிட உள்ளார்.அதே அதிமுக சார்பில் கோவிந்தபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நல்லத்தம்பி போட்டியிடுகிறார்.இதில் ரேகா பிரியதர்ஷினியே வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக விகடன் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது..அதே போல சங்ககிரியில் பாமக சதாசிவம் மற்றும் திமுக வில் சீனிவாசன் போட்டியிடுகிறார்.இதில் பாமக சதாசிவம் அதிக அளவு வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் எனக் கூறியுள்ளனர்.

அதே போல சேலத்தாம்பட்டி திமுக ராஜேந்திரனும் பாமக அருளும் போட்டியிட உள்ளனர்.இதில் திமுக வை சேர்ந்த சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் வெற்றி பெற உள்ளதாக கூரியுள்ளனர்.அதிகபடியான தொகுதிகளில் திமுகவே வெற்றி பெரும் என விகடன் கருத்து கணிப்பு கூறியுள்ளது.