முதல்வருக்கு எதிராக ஆளுநருக்கு பறந்த புகார்! அரசியலில் திடீர் பரபரப்பு!

0
78

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் குமாரசாமி முதலமைச்சராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவருடைய ஆட்சி எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சி கலக்கப்பட்டது அதன் பிறகு பெரும்பான்மையான சட்டசபை உறுப்பினர்கள் இருந்ததால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றுவரும் அமைச்சரவையில் கிராம மேம்பாட்டு துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருந்து வருபவர் ஈஸ்வரப்பா இவர் தன்னுடைய துறையில் முதலமைச்சர் எடியூரப்பா தலையிடுவதாக அதோடு தனக்கு தெரியாமல் தன்னுடைய துறைக்கு நிதி ஒதுக்குவதாக ஆளுநரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக அமைச்சர் ஈஸ்வரப்பா ஆளுநர் வஜூபாய் வாளாவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது அந்த மாநில முதலமைச்சரை எடியூரப்பாவின் அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தன்னுடைய துறையில் தலையிடுகிறார் அதோடு தன்னுடைய துறை நிதியிலிருந்து ரூபாய் 774 கோடியை அவர் அனுமதித்தார். தனக்குத் தெரியாமல் அவர் பணத்தை அனுப்புமாறு தன்னுடைய துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கின்றார் ஈஸ்வரப்பா. தன்னுடைய துறையில் விவரங்கள் தலையிட்டு கர்நாடக அரசின் விதிமுறைகளை முதலமைச்சர் மீறிவிட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே இது தொடர்பாக மாநில ஆளுநர் நேரடியாக தலையிட்டு மாநில அரசின் விதிமுறைகள் மற்றும் நடைமுறை தொடர்பாக முதலமைச்சரிடம் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் ஈஸ்வரப்பா. அதோடு இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கும் மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா அவர்களுக்கும் அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல் தெரிவித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.