“மோடியை எதிர்க்கும் முழு தில்லும் ஸ்டாலினிடம் தான் உள்ளது” மற்ற காங்கிரஸ் முதல்வர்களிடம் இல்லை- ஈ வி கே எஸ் இளங்கோவன்!!
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தற்பொழுது மோதல் நிலவை வருகிறது. தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நாம் தனித்து நிற்க வேண்டும் கூட்டணி நமக்கு கை கொடுக்காது என்று மேடை ஏறும்போதெல்லாம் பேசி வருகிறார். இவரைத் தொடர்ந்து எம்பி கார்த்திக் சிதம்பரமும் அவ்வழியே பேசுகிறார். இவ்வாறு இருக்கையில் இவர்கள் இரண்டு பேரும் கருத்துக்களும் தவறானவை இன்று காங்கிரஸின் மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, தற்கொலை நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அதனை வரவேற்க வேண்டிய விஷயம் தான் ஆனால் கூட்டணியில் இருக்கும் கட்சியுடன் போட்டி போட்டு கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் அது பின்னடைவைதான் கொடுக்கும். நம் கட்சிக்கு தேவையானவற்றை மேலிடத்திலோ அல்லது கட்சி சார்பாக ஆலோசனைக் கூட்டத்திலோ தெரிவிக்கலாம்.
இதனையெல்லாம் விட்டுவிட்டு பொது மேடையில் இதற்கு கூட்டணி கட்சிகளைப் போல் சீட்டு கேட்க வேண்டும் உரிமை வேண்டும் என்று பேசுவது நியாயமற்றது. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு முக்கிய காரணம் பாஜகவை ஒரேடியாக வீழ்த்துவதுதான். இதனை நோக்கமாகக் கொண்டு சாதி மதம் என்று பார்க்காமல் ஒருமித்த கருத்துடன் முன்னேற வேண்டும்.
ஆனால் நிர்வாகிகளின் இந்த அநாகரிகம் அற்ற பேச்சானது கட்சிக்கு பலவீனத்தை சம்பாதித்து கொடுத்து விடும். காங்கிரஸ் கட்சி என்ற தனிப் பெரும்பான்மையை பார்க்காமல் அதனை நாட்டுடன் சேர்த்து நம்மால் என்ன நன்மை என்பதை யோசிக்க வேண்டும்.நாட்டின் நலன் காப்பாற்றப்பட வேண்டும். அதேபோல காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் முதலமைச்சர்களை விட தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்டாலின் தான் பாஜகவை முழுமையாக எதிர்க்க கூடியவர். இவ்வாறு எதிர்ப்பதால் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமா என்று சற்றும் யோசிக்காமல் முழுமையான எதிர்ப்பை கொடுத்து வருகிறார்.
இவ்வாறு செயல்படும் கட்சி உடன் மனம் ஒத்து இருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு திமுக காங்கிரஸ் என்று தனித்து தான் காணப்பட்டோம். ஆனால் கால சூழ்நிலைகளும் அதற்கு ஏற்ற சந்தர்ப்பங்கள் அமையும் பொழுது நம்மையும் மாற்றிக்கொள்ள வேண்டும். இது இயல்பான ஓர் விஷயம்தான். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டில் நன்மை நிலவ திமுக பெருமளவு எதிர்த்து வருகிறது. இதனை வரவேற்று நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.