இந்தியாவை அவதூறாக பேசினாலும் நான் அங்கு தான் சுற்றுலா செல்வேன்!! ஸ்டாலின் திட்டத்தால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

Photo of author

By Rupa

இந்தியாவை அவதூறாக பேசினாலும் நான் அங்கு தான் சுற்றுலா செல்வேன்!! ஸ்டாலின் திட்டத்தால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து இன்று இரண்டாம் கட்ட வாக்கு பதிவானது 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் முடிந்ததையொட்டி தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முன்னதாகவே மாலத்தீவுக்கும் இந்தியாவிற்கும் இடையே சற்று தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் இவ்வாறு முதல்வர் செல்வது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் லட்சத்தீவிற்கு சென்று போட்டோஷூட் நடத்தி சொந்த நாட்டில் உள்ள சுற்றுலா தளத்தை குறித்து எடுத்துரைத்தார்.

ஒரு பக்கம் இது வியாபார யுக்தி என்று பலர் கூறினாலும் சொந்த நாட்டில் உள்ளதை பறைசாற்றுவதில் தவறில்லை என்று பலரும் கூறினர்.பிரதமர் மோடியின் இந்த போட்டோ ஷூட்டால் மாலத்தீவு அமைச்சர்கள் பலர் இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.குறிப்பாக இந்தியர்கள் சுத்தம் என்பதை கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதை ஆணித்தரமாக கூறியதால் இதற்கு நம் நாட்டில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு செல்லும் வரத்துக்களும் கணிசமாக குறைய தொடங்கியது.மேற்கொண்டு மாலத்தீவு அதிபரும் இது எங்கள் நாட்டிலிருந்து அரசாங்க ரீதியாக எதுவும் கூறப்படவில்லை.இது அவரவரின் தனிப்பட்ட கருத்து என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.இருந்த போதிலும் மாலத்தீவு அமைச்சர்கள் கூறியது குறித்து இரு நாடுகளுக்கிடையே ஓர் சிறிய வார்த்தை  போராகவே இருந்தது.

அதேபோல மாலத்தீவு அதிபரும் இந்தியாவை ஓரங்கட்டி விட்டு சீனாவிடம் மிகவும் நெருங்கி நட்புறவாடினார்.இவ்வாறான சூழல் நிலவும் பொழுது பெரும் விளையாட்டு வீரர்கள் முதல் நடிகர்கள் என பலரும் மாலத்தீவு செல்வதை எதிர்த்தனர்.ஆனால் தற்பொழுது தனது சொந்த ஓய்விற்காக சொந்த நாட்டின் கௌரவத்தை விட்டுவிட்டு மாலத்தீவுக்கு குடும்பத்துடன் செல்ல ஸ்டாலின் தயாராக உள்ளார்.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் இவர்கள் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதே செல்வதாக இருந்தது.ஆனால் அது கொரோனா காலம் என்ற காரணத்தினால் அந்த பயணத்திட்டம் ரத்தானது என்று கூறுகின்றனர்.இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததையொட்டி சிறிது நாட்களுக்கு குடும்பத்துடன் ஓய்வெடுக்க விரும்புவதால் ஸ்டாலின் அவர்கள் இவ்வாறான சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்று பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதேபோல இந்த நாடாளுமன்ற தேர்தலில் வேங்கை வயல் கிராமத்தினர் சார்பாக ஒரு ஓட்டு கூட விழாத நிலையில் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்வது சரிதானா என்றும் மேலும் இந்தியாவை அவதூறாக பேசிய மாலத்தீவிற்கே ஓர் முதல்வர் செல்லலாமா எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.