சட்டசபை தேர்தல் சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனுடைய வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்ககளிலும் தீவிர பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது.
வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள் அதாவது சிசிடிவி கேமரா போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன ஆனால் வாக்கு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என்று திமுக சார்பாக ஒரு மிகப்பெரிய புகார் கடிதத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் ஆணையத்திற்கும், திமுக சார்பாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
திமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் இப்போழுதே கணக்கு போட தொடங்கிவிட்டார்கள்.யார் அமைச்சர் என்ற கணக்கு ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தாலும் மறுபக்கம் அமையவிருக்கும் ஸ்டாலின் ஆட்சி வழக்கமான விமர்சகர்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் திமுக முனைப்புடன் இருந்து வருகிறது.
ஆகவே அடுத்து அமையவிருக்கும் ஸ்டாலின் ஆட்சிக்கு ஆலோசனை வழங்க சில முக்கிய அதிகாரிகளை இப்போதே தேர்வு செய்து விட்டார்களாம் திமுகவை சேர்ந்தவர்கள். ஏப்ரல் மாதம் 6ஆம் தேதிக்கு பின்னர் பல ஐஏஎஸ் அதிகாரிகளும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளும், சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் பல ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் ஸ்டாலினுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், அடுத்து திமுக ஆட்சி அமைந்தால் குறிப்பிட்ட 2 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை தன்னுடைய ஆலோசகர்களாக வைத்துக் கொள்வது என்ற முடிவில் இருக்கிறாராம் ஸ்டாலின். அந்த இரண்டு அதிகாரிகளும் இதற்கு முன்னரே கலைஞரிடம் பணிபுரிந்தவர்கள் அவரிடம் நன்மதிப்பையும் பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது.
தனக்கு நெருக்கமானவர்களை தன்னுடைய ஆலோசகர்களாக வைத்துக்கொள்வதுதான் ஸ்டாலினின் திட்டம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது அரசு ரீதியான பதவிகளை கடந்து தனக்கென தனி ஆலோசனை சொல்வதற்காக சிறப்பு ஆலோசகர்களாக இந்த இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறாராம் ஸ்டாலின்.