“அதிமுக ஆட்டம் க்ளோஸ்”.. நான் சொல்ற தொகுதியில நில்லுங்க.. OPS- க்கு ஸ்டாலின் கொடுத்த நியூ அசைன்மென்ட்!!

0
23
Stalin plans to make OPS stand against AIADMK
Stalin plans to make OPS stand against AIADMK

DMK OPS: சட்டமன்ற தேர்தல் நெருங்கி  வரும் சமயத்தில் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளும் கட்சிக்கும் ஆளும் கட்சியில் இருப்பவர்களும் மாற்றுக் கட்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக, அதிமுகவின் முக்கிய புள்ளிகள் என தொடங்கி கூட்டணி கட்சிகள் வரை இடமாறி வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தற்போது திமுகவுடன் இணைந்துள்ளது. மேலும் ஓபிஎஸ் ஸ்டாலினை சந்தித்து மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

இவ்வாறு அதிமுகவின் சக்தி பீடங்களாக இருந்த ஒவ்வொருவரும் திமுகவிற்கு சாதகமாகி வருகின்றனர். அதேபோல தேமுதிக கூட்டணி வைத்துக் கொண்டதால் அவர்களுக்கு எட்டு தொகுதிகள் வரை திமுக  ஒதுக்குவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அதிலும் விஜயகாந்த் வெற்றி வாகை சூடிய விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதாவை போட்டியிட வேண்டாம் என்று ஸ்டாலின் கூறுகிறாராம். அதற்கு காரணம், அதிமுகவிலிருந்து வெளியேறிய பெரும்புள்ளிகளை வைத்து அவர்களையே வீழ்த்த மாபெரும் பிளான் போட்டுள்ளாரம். அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணியில் பவர்ஃபுல்லான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எதிராக பிரேமலதாவை களம் இறக்க உள்ளாராம்.

அதேபோல ஓபிஎஸ்-ம் திமுக கூட்டணியில் இணைகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால், கட்டாயம் திமுக போடி தொகுதியில் இவரை நிற்க விடமாட்டார்களாம். மாறாக அதிமுகவின் பலம் வாய்ந்த தொகுதியாக இருக்கும் இடத்தில் தான் ஓபிஎஸ் போட்டியிட வேண்டுமாம். அந்த வகையில் போடி தொகுதியில் ஓபிஎஸ் க்கு பதிலாக, திமுகவை சேர்ந்த எஸ் லட்சுமணன், புருஷோத்தமன், வெங்கடேஷ் குமார் உள்ளிட்டோர் வரிசை கட்டி நிற்பதாகவும் இவர்களில் ஒருவரை தான் ஸ்டாலின் தேர்ந்தெடுப்பார் என்று அண்ணா அறிவாலயத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

Previous articleஆட்சியில் பங்கு இல்லையன்றால் பந்தம் இல்லை.. திமுக-வுக்கு “கூட்டணிகள் போடும் ஆர்டர்”.. கதிகலங்கும் ஸ்டாலின்..
Next articleகாலையில் அதிரடி: விஜய்யுடன் இணைகிறாரா சசிகலா.. கூட்டணி குறித்து வெளியான “முக்கிய தகவல்”..