ஆட்சியில் பங்கு இல்லையன்றால் பந்தம் இல்லை.. திமுக-வுக்கு “கூட்டணிகள் போடும் ஆர்டர்”.. கதிகலங்கும் ஸ்டாலின்..

0
208
The alliance parties are asking DMK to take part in the government
The alliance parties are asking DMK to take part in the government

DMK: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது பரப்புரையை ஆரம்பித்து விட்டனர். எதிர் கட்சி நிர்வாகிகள், அதன் கூட்டணி கட்சிகள் என பலர் ஆளும் கட்சியில் இணைந்தாலும், திமுக பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக விஜய் அரசியலுக்குள் வந்ததும் கூட்டணி கட்சிகளுக்கு சம பங்கு, ஆட்சியில் உரிமை எனக் கூறியது பல  கட்சிகளுக்கு பாதகமாகவே அமைந்துவிட்டது. குறிப்பாக, திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த அறிவிப்பிற்கு பிறகு தலைமைக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதவாது எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டு வருகின்றனர். தலைமை அதற்கு முற்றிலும் மறுப்பு தான் தெரிவித்துள்ளது. கடந்த முறை திமுக மட்டும் தனித்து 173 தொகுதிகளில் நின்றது. இதரக் கூட்டணிகளுக்கு ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகளை ஒதுக்கியது. ஆனால் இம்முறை திருமா-வே இரட்டை இலக்க எண்ணிக்கையில் தான் தொகுதி வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். மேலும் காங்கிரசும் கூட்டணியில் பங்கு என்பதை தீவிரமாக பேசி வருகிறது.

ஒருபுறம் ஐந்தாண்டு ஆட்சிகள் சரிவர செய்யவில்லை எனக் கூறி ஒரு தரப்பினர் வாதம் வைக்கின்றனர். மற்றொருபுறம் விஜய் தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதில் கூட்டணி கட்சிகளும் திமுகவிற்கு அழுத்தத்தை தான் தருகிறது. இவற்றையெல்லாம் சமாளித்து மீண்டும் திமுக ஆட்சி கட்டிலில் அமருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous articleபங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொ*லைகள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல; அது தொடர்ச்சியான அரசியல் தோல்வியின் பிரதிபலிப்பு
Next article“அதிமுக ஆட்டம் க்ளோஸ்”.. நான் சொல்ற தொகுதியில நில்லுங்க.. OPS- க்கு ஸ்டாலின் கொடுத்த நியூ அசைன்மென்ட்!!