மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின் – பிரதமர் மோடிக்கு கடிதம்!

Photo of author

By Parthipan K

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அமைச்சருக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஸ்டாலின் அவர்கள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியிடம் மேகதாதுவில் அணைகட்ட முன்னதாகவே அனுமதி வழங்க கோரி கேட்டிருந்த மனுவை சுட்டிக்காட்டினார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மேகதாது அணை உள்பட நீர் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கோரி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில் மேகதாதுவில்  அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு குடிநீர் வருவதில் சரிசெய்ய முடியாத அளவிற்கு பிரச்சனைகள் உருவாகும் என்பதனை குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் இந்த மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் அச்சுறுத்தலாக அமையும் என்றும்  குறிப்பிட்டிருந்தார். குடிநீர் திட்டம் என்ற பெயரில் இந்த மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் முன்மொழிய படக்கூடாது என்றும் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தை திமுக கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கடிதத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.