தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை கொண்டு வந்து வெளுக்க வேண்டும்! திருமண விழாவில் ஸ்டாலின் டென்சன்..!!

Photo of author

By Jayachandiran

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை கொண்டு வந்து வெளுக்க வேண்டும்! திருமண விழாவில் ஸ்டாலின் டென்சன்..!!

Jayachandiran

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை கொண்டு வந்து வெளுக்க வேண்டும்! திருமண விழாவில் ஸ்டாலின் டென்சன்..!!

தமிழகத்தின் வணிக சங்கங்களின் மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்களின், இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மணமக்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பின்னர், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை விமர்சித்தார். மேற்கு வங்க முதல்வரும் எதிர்த்து வருகிறார் என்பதை சுட்டிக்காட்டி இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பல்வேறு மாநிலங்கள் எதிர்க்கும் சூழலுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் மட்டும் எதிர்க்க முடியாத ஒரு வலிமையில்லாத ஆட்சி நடக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார். இப்படிப்பட்ட லட்சணத்தில் தமிழகத்தின் முதல்வராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சி நடத்துவதாக பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழகம் நல்லாட்சி விருதுகளை வாங்கி இருப்பதாகவும் கூறுகிறார். தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசுக்கு, விருது கொடுத்தவர்களை கூட்டி வந்து அடிக்க வேண்டும் என்று ஆவேசமாக ஸ்டாலின் பேசியுள்ளார். நடுவண் அரசு தமிழகத்திலே பல மக்கள் விரோத சட்டங்களை தொடர்ந்து இயற்றி வருகிறது. இப்போது நடக்கும் ஆட்சி கமிஷன் ஆட்சி என்றும் அதிமுகவை தாக்கி பேசினார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மீது குற்றம் சாட்டும் ஸ்டாலின் திமுக ஆட்சியன் போது சென்னையில் ஒரு கோடி ரூபாயில் அமைக்க வேண்டிய பாலம் கட்டுமான பணியை ஒன்றரை கோடிக்கு இழுத்து ஊழல் செய்ததாக அதிரடியாக தெரிவித்தார்.