பாத்திமா பாபுவை கடத்திய ஸ்டாலின்.. இவர்களுக்குள் என்ன உறவு!!
1990களில் மிகவும் பிரபலமாக இருந்த செய்தி தொலைக்காட்சியான தூர்தர்ஷனில்(பொதிகை) செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பாத்திமா பாபு.இவரின் அழகு,தமிழ் உச்சரிப்பு பிடித்து போகவே பலர் இவர் வாசிக்கும் செய்தியை பார்ப்பதற்காகவே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.இதனை தொடர்ந்து சின்னத்திரை,வெள்ளைத்திரை என்று தனது பயணத்தை தொடங்கி இன்றளவும் நடித்து வருகிறார்.இப்படிப்பட்ட பாத்திமா பாபு குறித்து பல வருடங்களாக ஒரு வதந்தி சுற்றி வருகிறது.
இந்த வதந்தியில் சிக்கி இருப்பவர் தற்பொழுது முதல்வராக இருக்கும் மு,கஸ்டாலின் அவர்கள் தான்.அது என்னவென்றால் பாத்திமா பாபு செய்தி வாசிப்பாளராக இருந்தபோது திமுகவை குறித்த ஊழல்களை,குற்றங்களை தனது கம்பீரக் குரலால் செய்தியாக வெளிகொண்டு வந்தார். இதனால் கோபமுற்ற ஸ்டாலின் அவரை கடத்தி மிரட்டியதாக செய்திகள் உலா வந்தன.
மேலும் ஒரு சிலர் ஸ்டாலின் பாத்திமாவின் அழகில் மயங்கி அவரை கடத்தினார்.இதனால் தான் பாத்திமா அன்றைய வருடத்தில் சில மாதங்கள் செய்தி வாசிக்காமல் இருந்தார் என்று பெரிதாக பேசப்பட்டது.பல வருடங்களாக இந்த சர்ச்சை நீடித்து வந்தது.பிற கட்சிகளை சேர்ந்த பலர் இந்த சர்ச்சை குறித்து ஸ்டாலின் மீது விமர்சனத்தை முன்வைத்து அவ்வப்போது பேசியததை நாம் கண்டிருப்போம்.ஆனால் இது முற்றிலும் வதந்தி என்று சில வருடங்களுக்கு முன் பாத்திமா பாபு நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.அன்றைய காலகட்டத்தில் செய்தி வாசிப்பிற்கு பேர் போன பாத்திமா பாபுவிற்கு “சித்திரப்பாவை” என்ற தொடரில் நடிக வாய்ப்பு தேடி வந்தது.தூர்தர்ஷன் நடைமுறை படி சீரியலில் நடிக்க தொடங்கிவிட்டால் தொடர் முடியும் வரை செய்தி வாசிப்பு பணி மேற்கொள்ள முடியாது.இதன் காரணமாக தான் நான் அன்றைய காலகட்டத்தில் சில மாதங்களுக்கு செய்தி வாசிக்காமல் இருந்தேன்.ஆனால் சிலர் ஸ்டாலின் தன்னை கடத்தி மிரட்டியதால் தான் நான் பயந்து செய்தி வாசிப்பதை நிறுத்தி விட்டேன் என்று வதந்திகள் உலா வந்தன.ஆனால் இது முற்றிலும் ஆதாரமற்ற வதந்தி.தன்னை யாரும் கடத்த வில்லை என்று நான் அந்த சமயத்தில் குமுதம் நாளிதழுக்கு இது குறித்து பேட்டி அளித்திருந்தேன்.ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை.என் பேட்டி பெரியளவில் பேசப்பட வில்லை.இதனால் இன்றளவும் இந்த வதந்தி உலா வந்து கொண்டிருக்கிறது.தான் வதந்திக்கு உண்மை காரணத்தை தெரிவித்து விட்டேன்.இதற்கு மேலும் இது குறித்து பேசப்பட்டால் அதற்கு இனி பதில் சொல்ல மாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.