ரயிலில் பயணம் செய்த முக ஸ்டாலின்! திடீரென ஒலித்த அபாய ஒலி பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்!

0
239
Stalin who traveled by train! The security forces are in a state of panic after the sudden sound of danger!
Stalin who traveled by train! The security forces are in a state of panic after the sudden sound of danger!

ரயிலில் பயணம் செய்த முக ஸ்டாலின்! திடீரென ஒலித்த அபாய ஒலி பதற்றத்தில் பாதுகாப்பு படையினர்!

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வேலூர் மாவட்டம் சென்றார்.அப்போது அவர் ரயிலில் தான் பயணம் செய்தார்.இரண்டு நாட்கள் சுற்று பயணம் முடிவடைந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பினார்.அப்போது நேற்று மாலை அவர் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார்.மேலும் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 7.15 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னைக்கு தனி ரயில் பெட்டியில் பயணம் செய்தார்.

அப்போது அந்த ரயில் திருவலம் அடுத்த முகுந்தராயபுரம் அருகே வந்துகொண்டிருந்தது.அந்த ரயிலில் பயணம் செய்த வடமாநில பெண் பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.அப்போது ரயில் நின்றது.போலீசார் உடனடியாக விரைந்து வந்து அந்த  பெண் பயணியிடம் விசாரணை செய்தனர்.அப்போது அவர் தெரியாமல் கைப்பட்டது என கூறியுள்ளார்.

வடமாநில பெண்ணை போலீசார் எச்சரித்தனர்.அதனை தொடரந்து ரயில்வே அதிகாரிகள் அந்த பெண்ணிற்கு ரூ 1000 அபராதம் விதித்து தொடர் பயணத்திற்கு அனுமதித்தனர்.ரயில் நடுவழியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ரயில் ஒரு சில நிமிடங்கள் கால தாமதாக அரக்கோணம் வந்தடைந்தது.அதனால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பாதுக்காப்பு பணியில் இருந்த போலீசார் இடையே பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

Previous articleஅரசு நிலத்தை ஆக்கிரமித்தால் இத்தனை மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
Next articleஇன்று தங்கத்தின் விலை சற்று சரிவு! உடனே முந்துங்கள் கடைகளில் அலைமோதும் கூட்டம்!