எடப்பாடியை பழி வாங்கும் விதத்தில் ஸ்டாலின் எடுத்த முடிவு? அதிர்ச்சியில் தொண்டர்கள்!  

0
83
Stalin's decision to avenge Edappadi? Volunteers in shock!
Stalin's decision to avenge Edappadi? Volunteers in shock!

எடப்பாடியை பழி வாங்கும் விதத்தில் ஸ்டாலின் எடுத்த முடிவு? அதிர்ச்சியில் தொண்டர்கள்!

சட்டமன்ற தேர்தலானது கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலின் முடிவில் திமுக தன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 159 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது.அதனைத்தொடர்ந்து அதிமுக 75 இடங்களில் முன்னிலை வகித்து தோல்வியை சந்தித்தது.திமுக-வின் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் முதன்முதலாக தமிழகத்தின் முதல்வராக,ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்தார்.அதில் இதர கட்சி தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்தனர்.அதில் அதிமுக துணைத்தலைவர் பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டார்.மநீம கட்சி தலைவர் கமல்ஹாசனும் கலந்துக்கொண்டார்.அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதும் பல அதிரடியான திட்டங்களில் கையெழுத்திட்டார்.கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை முதலில் அமல்படுத்திய நிலையில்,முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆலோசனைக்கூட்டம் இன்று மேற்கொண்டார்.அதனையடுத்து இன்று காலை தமிழகத்திற்கு 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினார்.

இந்த ஊரடங்கின் தேதியானது திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது.அதே நாளில் தான் அதிமுக,எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க பொதுக்கூட்டத்தை கூடுவதாக தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் ஸ்டாலின் பொது முடக்கத்தை அமல்படுத்தியிருப்பது அதிமுக-வின் பொதுக்கூட்டத்தை கலைக்கவே என பலர் பேசி வருகின்றனர்.நேற்று எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் விதத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே சரமாரியாக போட்டி நிகழ்ந்தது.

ஒருவர் மேல் ஒருவர் தொடர்ந்து குற்றம் சாட்டினர்.அதனையடுத்து யார் எதிர்கட்சி தலைவர் என முடிவுகள் எடுக்கப்படாதா நிலையில் அக்கூட்டத்தை மே 10-ம் தேதி தள்ளி வைத்தனர். அக்கூட்டம் நிறைவுபெற்றதும் இருவரும் முன்னால் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றனர்.அதனையடுத்து இன்று ஸ்டாலின் திடீரென்று 14 நாட்களுக்கு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளார்.இந்த பொதுமுடக்கம் அதிக அளவு தொற்று பரவல் காரணமாக எனக் கூறினாலும்,அரசியல் வட்டாரங்கள் அதிமுக கூட்டத்தை கலைப்பதற்கு என பேசி வருகின்றனர்.ஏனென்றால் அவர் 14 நாட்கள் அமல்படுத்திய ஊரடங்கில் பொதுக்கூட்டம் ஏதும் கூட்டக்கூடாது என தடை விதித்துள்ளார்.