DMK BJP: தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து பாஜகவும் திமுகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறது. ஆனால் திமுக வோ மத்திய அரசை எதிர்த்து பல கண்டனங்களை எழுப்பியுள்ளது. ஆனால் மற்றொருபுறம் கூட்டணி கட்சியான காங்கிரசை கூட அழைக்காமல் ஒரு சில நிகழ்ச்சிகளில் மோடியை முன்னிறுத்தி விழாவை சிறப்பித்தனர். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு மாநிலங்களின் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இதனை பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இது ரீதியாக அனைத்து கட்சி பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் பிரதமர் மோடி வரும் ஆறாம் தேதி பாம்பன் பாலம் திறப்பிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரிய உள்ளார். அந்த தருவாயில் அவரை சந்திக்க வேண்டுமென ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். குறிப்பாக அவரை சந்தித்து தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்திற்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது குறித்து அனைத்து கட்சி எம்பிகளுடன் தீர்மானத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் இதுரீதியாக பிரதமர் மோடி சார்பாக ஸ்டாலினுக்கு எந்த ஒரு கடிதமும் வரவில்லை. அதேபோல திமுக மோடியை சந்தித்து எதிர்ப்பு தெரிவிப்பது போல கபட நாடகம் ஆடுகிறது ரகசிய கூட்டணியில் அனைத்து பேச்சு வார்த்தையும் நடந்து முடிந்துவிட்டது என கூறுகின்றனர். இதெல்லாம் மக்களின் கண் துடைப்புக்காக நடத்துவது மட்டுமே என்றும் இவர்கள் பெரும் வாரியான எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.