சென்னையில் கடந்த ஆறாம் தேதி எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சி நடந்து முடிந்ததையடுத்து அரசியல் வட்டாரம் சற்று பரபரப்பாகவே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தான். இவர் 2026 ஆம் ஆண்டு மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசியதால் துணை முதல்வர் உதயநிதி என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்டாயம் இவர் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று திருமாவுக்கு தினம்தோறும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது, ஆதார் அர்ஜுனா தற்பொழுது வரை கட்சி மற்றும் பொறுப்பில் தான் உள்ளார்.
அவர் குறித்த நடவடிக்கைகள் கட்டாயம் மேல்மட்ட நிர்வாகிகளுடன் கலந்து யோசித்து தான் எடுக்கப்படும். தலித் அல்லாத நபர்களுக்கு கட்சியில் பாதுகாப்பு என்பது கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்று. எனவே முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்திருந்தார்.
ஆனால் விடுதலை சிறுத்தை தொண்டர்கள் திருமாவிடமிருந்து இதனை சற்று கூட எதிர்பார்க்கவில்லை. இறுதிவரை திமுகவின் கைக்குள் இருக்க வேண்டுமா என்று சரமாரி கேள்விகளை கேட்டு வருகின்றனர். இப்படி நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் இன்று திருமாவளவன் முதல்வரை சந்திக்க உள்ளார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். முதல்வரை சந்திப்பதற்கு முன்னதாகவே இடை செய்ததால் அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.