cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் மழை தொடர்ந்து குறுக்கிட்டு வரும் நிலையில் ஸ்டார்க் கோபத்தில் கத்திய ஸ்டார்க்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் தற்போது 3 வது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியானது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் முதலில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய அணி இந்த ஆஸ்திரேலியா தொடரில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில் நடந்த முடிந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகள் வென்றுள்ளது. இதனால் இந்த மூன்றாவது போட்டியை அதிகம் எதிர் பார்த்தனர்.
ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது 445 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து டிரா செய்ய போராடி வருகிறது இதில் கே எல் ராகுல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 65 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இந்த போட்டியில் அடிக்கடி மழை பொழிந்து வருகிறது. இதில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச வரும்போது சரியாக மழைபொழிய தொடங்குகிறது. இன்று 62 வது ஓவரை வீச வந்தவுடன் மழை லேசாக தூறியது உடனே வெளியேற சொன்ன அம்பயர் உடனே ஸ்டார்க் அம்பயரை பார்த்து மழை இல்லை என் போக சொல்றிங்க என விவாதித்து கோபத்துடன் வெளியேறினார்.