cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியில் ஆஸி வீரர் ஸ்டார்க் கடுப்பான விஷயம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இரண்டு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இதனால் இந்த மூன்றாவது போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது. மேலும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சூறையாடினர். இதில் டிராவிஸ் ஹெட் 152 ரன்களும் ஸ்மித் `101 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இந்நிக்சில் விளையாடிய இந்திய அணி 44 ரன்கள் எடுத்த 4 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணிக்கு எதிராக பந்து வீசிய ஆஸி வீரர் மிட்செல் ஸ்டார்க் பந்து வீசும் போது மழை இரண்டு முறை குறுக்கிட்டது. இதனால் அனைவரும் களத்தை விட்டு வெளியேறிய போது ஸ்டார்க் கோபத்தில் களத்தை விட்டு வெளியே வராமல் களத்திலேயே இருந்தார். தொடர்ந்து போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.