மணிப்பூர் வன்முறைக்கு ஸ்டார்லிங் தான் காரணமா!! எலான் மஸ்கின் அதிரடி முடிவு!!

Photo of author

By Gayathri

மணிப்பூரில், இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையில் கடந்த ஆண்டு வன்முறையானது வெடித்துள்ளது.

இதன் மூலம், 142 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் மற்றும் தோராயமாக 54,488 பேர் தங்களுடைய சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூர் வன்முறையில் ஸ்டார்லிங் நிறுவனத்தின் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தற்பொழுது தகவல்கள் வெளியாக்கிய நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சொந்தக்காரரான எலான் மஸ்க் இந்தியாவில் தற்பொழுது அதனை ஆப் செய்துள்ளார்.

சமீபத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கீராவ் குனௌவில் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுடன், இணைய சாதனங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஸ்டார்லிங்கினுடைய லோகோ இருப்பதை ராணுவத்தினர் X பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றனர்.

மேலும் ராணுவ படையினர் அதில் குறிப்பிட்டிருப்பதாவது :-

குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகள் ஸ்பியர் கார்ப்ஸின் கீழ் மணிப்பூர் காவல்துறையுடனும் பிற பாதுகாப்புப் படைகளுடனும் இணைந்து சுராசந்த்பூர், சந்தேல், இம்பால் கிழக்கு மற்றும் காக்போக்பி மாவட்டங்களில் உள்ள மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அதில், ஸ்னைப்பர்கள், தானியங்கி ஆயுதங்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள், ஒற்றைக் குழல் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் போர் தளவாடங்கள் உட்பட 29 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிகழ்வின் மூலம் எலான் மாஸ்க் மீதும் குற்றம் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் மஸ்கின் ஸ்டார்லிங்கிற்கு இந்தியாவில் செயல்பட உரிமம் இதுவரை வழங்கப்படவில்லை.

மேலும், இந்த சாதனமானது மியான்மருடன் உள்ள எல்லை வழியாக கடத்தப்பட்டு இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.