TASMAC: கூடுதல் தொகை ரூ.10 டாஸ்மாக்கில் பெறுவதை கண்காணிக்கக வரபோகும் டிஜிட்டல் முறை.
தற்போது சமீப காலமாக மதுபான கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவதாக நிறைய புகார்கள் எழுந்த நிலையில் இந்த கூடுதல் தொகை பெறுவதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் கணினி மையமாக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் மூலம் விற்பனை அனைத்தையும் கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இது தமிழக அரசின் மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை பொதுவாக காலை 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு 45 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
பொதுவாக தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு மட்டும் பத்து லட்சத்துக்கும் மேலாக பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பல வீடியோக்கள் மூலம் புகார்கள் பரவியது. இந்த கூடுதல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசு.
டாஸ்மாக் கடைகளில் உற்பத்தி முதல் விற்பனை வரை கண்காணிக்க அனைத்து மதுபான கடைகளிலும் கணினிமயமாக்கப்பட்ட முறையை நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த டிஜிட்டல் முறையின் மூலம் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கியூ ஆர் ஸ்கேன் செய்ய முடியும் மற்றும் இது போன்ற கூடுதல் தொகை பெறுவதை கண்காணிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த டிஜிட்டல் முறை வருகிற ஏப்ரல் 1 ம் தேதி முதல் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே தற்போது ராணிப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்ட மதுபான கடைகளில் இந்த கணினி முறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.