தொடங்கியது முதல்வருடன் கூடிய ஆலோசனை! அதிகமான தளர்வுகள்!

Photo of author

By Kowsalya

கொரோனா தொற்று கடந்த 2 வாரமாக மிகவும் குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் பல தளர்வுகளை கொடுக்கலாம் என மருத்துவர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மே மாதம் பத்தாம் தேதி முதல் தொடங்கிய இந்த ஊரடங்கு கொரோனா தொற்றின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஒரு சில தளர்வுகளை அறிவித்து வந்தது அரசு. அரசு மற்றும் மருத்துவர்களின் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது .

ஊரடங்கின் காரணமாக அனைத்து போக்குவரத்து தடை பட்டிருந்த நிலையில் தொற்றுகள் வெகுவாக குறைந்துள்ளதால் போக்குவரத்து அனுமதி அளிக்கலாம் என்று யோசனை நடந்து வருகிறது.

மேலும் தொற்றுகள் குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு கூடுதலாக அதிக தளர்வுகள் கொடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. தொற்றுகள் குறையாத மற்ற 11 மாவட்டங்களுக்கு போக்குவரத்து அனுமதி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

கொரோனாவின் நிலைமையும், அடுத்தது மூன்றாவது அலை வரும் என்று சொல்வதால் அதை தடுக்க எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும், தடுப்பூசிகளின் இருப்பு பற்றியும், பூஞ்சை தொற்றுகளைப் பற்றியும் , தொற்றுகள் குறையாத மற்ற மாவட்டங்களுக்கு எந்த மாதிரியான தளர்வுகள் கொடுக்கலாம் என்பதை பற்றியும், ஆலோசனைக் கூட்டங்களில் பேசப்படுகிறது.

போக்குவரத்து துவங்குவது, கடைகள் திறக்கப்படும் நேரத்தை அதிகரிப்பது, ஜவுளி கடைகள் திறக்க அனுமதி அளிப்பது, உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கலாம் என்று அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.