கடந்த வருடம் வெளியான வைரல் வீடியோ! தூக்க மாத்திரை சாப்பிட்ட உரிமையாளர்!

0
73
Viral video released last year! The owner who ate the sleeping pill!
Viral video released last year! The owner who ate the sleeping pill!

கடந்த வருடம் வெளியான வைரல் வீடியோ! தூக்க மாத்திரை சாப்பிட்ட உரிமையாளர்!

தலைநகர் டெல்லியின் மால்வியா நகரில் காந்தா பிரசாத் (80) என்பவர் பாபா கா தாபா என்ற பெயரில் சிறு உணவகம் நடத்தி வந்தார்.  கொரோனா ஊரடங்கு காரணமாக தனது உணவகத்திற்கு யாரும் வரவில்லை எனவும் வருமானம் இல்லை எனவும் கண்ணீர் மல்க அவர் பேசிய வீடியோ  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமூகவலைதளங்களின் மூலம் நாடு முழுவதும் வைரலானது.

அந்த வீடியோ பார்த்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்த கடை உரிமையாளருக்கு உதவ முன் வந்தனர். மேலும் பலர் அந்த கடைக்கு நிதி உதவியும் செய்தனர்.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் வசிப்போர் பலர் அந்த உணவகத்திற்கு சென்று அவரது வியாபாரம் முன்னேறும் வகையில் உணவருந்தி அவரது வருமானத்தை பெருக்கினர்.

இதன் காரணமாக காந்தா பிரசாந்த் தனது சிறு கடையை மூடிவிட்டு கொஞ்சம் பெரிதாக உயர்தர உணவகம் ஒன்றை கடந்த டிசம்பரில் திறந்தார். அங்கே வியாபாரம் ஒன்றும் சொல்லும் படி இல்லாததை அடுத்து அவர் நஷ்டத்தை சந்தித்தார். எனவே அதை மூடி விட்டு மறுபடியும் தனது சிறு கடையையே போன வாரம் மீண்டும் திறந்தார்.

மால்வியா நகரில் மீண்டும் அதே பாபா கா தாபா என்ற பெயரிலேயே கடையை திறந்து வியாபாரம் ஆரம்பித்தார்.

இதற்கிடையில், உரிமையாளர் காந்தா பிரசாத் நேற்று இரவு திடீரென மயங்கி விழுந்தார். இதை தொடர்த்து, அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுபானத்துடன் தூக்கமாத்திரையை கலந்து குடித்ததால் காந்தா பிரசாத் சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், அந்த காந்த பிரசாந்த் மதுவில் தூக்க மாத்திரைகளை கலந்து குடித்துள்ளார். மேலும் வயது அதிகமாக இருப்பதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுயநினைவு அற்ற நிலையில் மருத்துவமனையில் உள்ளார் எனவும், இதை அவரது மகனும் ஒப்புக் கொண்டு உள்ளார்.

இது பற்றி அவரது மனைவி பாதாமி தேவி கூறும் போது நான் கடைக்கு உள்ளே இருந்தேன் என்றும், அவர் என்ன சாப்பிட்டார் என்று தனக்கு தெரியாது என்றும், அவர் மயங்கிய உடனே மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டேன் எனவும் கூறினார். ஆனால் மருத்துவர்கள் கணவனின் நிலை பற்றி மருத்துவர்கள் தன்னிடம் எதுவும் கூறவில்லை எனவும் கூறினார்.