DMK: அமைச்சர் பெரிய கருப்பன் மக்கள் ஏதுவாக கடன் பெரும் வகையில் “கூட்டறவு” என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழக கூட்டுறவு சங்கம் மூலம் மக்களுக்கு நகை கடன் வாகனம், மீன் வளர்ப்பு, கடல் கால்நடை வளர்ப்பு, இ வாடகை உள்ளிட்ட பல கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெறுவதற்கு மக்கள் தங்களின் வட்டத்தின் அருகிலிருக்கும் கூட்டுறவு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் தற்பொழுது மக்களுக்கு இதனை எளிமையாக்கும் வகையில் புதிய “கூட்டுறவு” என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் வெளியிட்டார்.
மேற்கொண்டு இது குறித்து அவர் கூறுகையில், பயனாளிகள் தங்களின் தேவைக்கேற்ப கடன்களை இதன் மூலமே பெற்றுக் கொள்ளலாம். தாங்கள் எந்த கடன் பெற விரும்புகிறீர்களோ அது குறித்து ஆவணங்கள் ஆன்லைன் வழியாக கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும். பின்பு இது குறித்த தகவல்கள் உங்கள் அந்த செயலியிலே அப்டேட்செய்யப்படும். அதுமட்டுமின்றி இந்த செயலி மூலம் நீங்கா வாங்கும் கடன் குறித்து அதற்குரிய வட்டி விகிதம், எப்பொழுது செலுத்த வேண்டும், கால அவகாசம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் மருந்தகம், கிடங்குகள் மேலும் நியாய விலைக் கடைகள் என அனைத்து விவரங்களையும் மக்கள் அறியும் வகையில் ஏதுவாக இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நடத்தும் மருந்தகங்களில் கிட்டத்தட்ட 20% வரை தள்ளுபடி கிடைக்கும் பட்சத்தில் அதனை அறிந்து மக்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.
மேற்கொண்டு மக்களின் அனைத்து வித தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த கூட்டுறவு செயலி அறிமுகப்படுத்தி உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இனி மக்கள் நேரடியாக கூட்டுறவு அலுவலகத்திற்கு சென்று கடன் குறித்த விவரங்களை அறியும் தேவை இருக்காது. இதனால் இனி கால விரையமும் ஏற்படாது.