வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது…. கால்நடை இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் !

0
182

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு வரும் 24 முதல் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைபட்டப்படிப்புகளின் (பிவிஎஸ்ஸி &ஏஎச் – கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் பிடெக் -உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு,கோழியினத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு,பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) சேர்க்கைக்கு தமிழ்நாட்டை நாட்டை சார்ந்த மாணவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மேலும் இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.... கால்நடை இளநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பம் !

விண்ணப்பம் தொடங்கும் நாள் : 24-08-2020 ( காலை 10 மணி முதல் )

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-09-2020 ( மாலை 6 மனி வரை)

சேர்க்கைத்தகுதிகள் ,தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையத்தளங்களில் காணலாம்.

Previous articleகிராமங்களில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்:! 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! விவசாய பொருட்கள் அவர்களின் வீட்டிலே கொள்முதல் செய்யும் திட்டம்!
Next articleபலியானவர்களின் எண்ணிக்கையில் இந்த நாடு மூன்றாவது இடமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here