இல்லத்தரசிகளே முந்துங்கள்! குறைந்தது தங்கத்தின் விலை கடைகளில் அலைமோதும் கூட்டம்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது.அதனால் மக்கள் அனைவரும் தங்கத்தின் மேல் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர்.அதனால் தங்கத்தின் விலை தொடரந்து அதிகரித்து வந்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
அதன் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகின்றது.இம்மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தையை சந்தித்தது.அதன் காரணமாக கடந்த 20 ஆம் தேதி ஒரு பவுன் ரூ 42,600 க்கு விற்பனையானது.அதற்கு அடுத்த நாள் பவுன் ஒன்றுக்கு ரூ 40 குறைந்த நிலையில் 42,560 ரூபாய்க்கு விற்பனையானது.அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்த வண்ணமே இருந்தது.
இந்நிலையில் நேற்று ஒரு சவரனுக்கு ரூ 280 ரூபாய் அதிகரித்தது.அந்தவகையில் ஒரு பவுன் ரூ 43,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 35ரூபாய் குறைந்தது.ஒரு கிராம் 5345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் பவுன் ஒன்றுக்கு ரூ 280 குறைந்து 42760 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.அதுபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 40காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 74.60க்கு விற்பனையாகின்றது.ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ 400 குறைந்து 74,600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.