இப்படியும் ஒரு பெற்றோரா? வலியால் கதறி துடித்த மகள்!

Photo of author

By Hasini

இப்படியும் ஒரு பெற்றோரா? வலியால் கதறி துடித்த மகள்!

20 வயதான தாசிம் என்ற பெண், ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தின் ராயச்சோட்டி நகரத்தின் கோத்தப்பள்ளி பகுதியில் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டிற்க்கு அருகில் வசித்து வந்த நபர் ஒருவரை இந்த பெண் நீண்ட காலமாக காதலித்தும் வந்துள்ளார்.

இவர்களின் காதலை குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறவில்லை. சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தலோ என்னவோ? இவர்களின் காதலை குறித்து தெரியாத அந்த பெண்ணின் பெற்றோர், அவருக்கு பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

ஆனால் தாசிமோ வரும் எல்லா வரன்களையும் வேண்டாம் என்றும், பிடிக்கவில்லை என்றும் காரணம் கூறி தட்டி கழித்து வந்துள்ளார். தொடர்ந்து இவர் வேண்டாம் என்று கூறி வருவதினால் அவர்கள் வீட்டில் இவர்மேல் சந்தேகப்பட ஆரம்பித்து உள்ளனர்.

அவரது சகோதரருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் விசாரித்த போது தங்கையின் காதல் கதை தெரிந்துக்கொண்ட சகோதரன் அதை வீட்டில் கூறி உள்ளான். அதைப்பற்றி அந்த பெண்ணிடமும் கேட்டு உள்ளனர்.

அவரும் காதலிப்பதாகவும், அவரை தவிர வேறு யாரையும் மணம் புரிய மாட்டேன் என்றும் கூறி உள்ளார். இதனால் கோபம் அடைந்த அவளது பெற்றோர் கடந்த வாரம் அந்த பெண் தூங்கிக் கொண்டு இருந்த போது அவள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உள்ளனர்.

வலி பொறுக்க முடியாத அந்த பெண்ணோ அம்மா அப்பா என்று அலறியும் சிறிது கூட மனம் இறங்காத கல் நெஞ்சக்கார பெற்றோர் கண்டு கொள்ளவே இல்லை. பின் அவளது சகோதரி அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று பின் காவல் நிலைய அதிகாரிகளிடம் பெற்றோர் மீது கொலை புகார் ஒன்றும் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.