மாதந்தோறும் உதவித்தொகை!! பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
90
Stipend every month!! Important announcement released by the Government Examinations Department for Class 10 students!!
Stipend every month!! Important announcement released by the Government Examinations Department for Class 10 students!!

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் தேதியை அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வினை அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வானது வருகின்ற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்த தேர்விற்கு தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 2024- 2025 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பினை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவிற்கு பின்னர் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவி தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10000 வழங்கப்படும். அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.1,000 வீதம் ஒரு கல்வியாண்டு முழுவதும் வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 வகுப்புகளில் உள்ள கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வானது கொள்குறி வகையில் இரண்டு தாள்களாக நடத்த பெறும். அதன்படி முதல் தாளில் கணிதம் தொடர்புடைய 60 வினாக்களும், இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய 60 வினாக்களும் இடம்பெறும்.

முதல் தாள் காலை 10 மணி முதல் 12:00 மணி வரையிலும் இரண்டாம் தாளானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 4:00 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை எழுத விருப்பமுள்ள மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை 30.11.2024 முதல் 09.12.2024 தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்களது விவரங்களை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணமாக ரூ.50 மட்டும் சேர்த்து 09.12.2024 க்குள் அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகசாப்பு கடையில் வேலை செய்தவர்!! பெண்ணை 50 துண்டுகளாக வெட்டி கொலை!!
Next articleதன்னுடைய காதல் கதையை ஓப்பனாகக் கூறிய கீர்த்தி சுரேஷ்! “எங்களுக்குத் தான் ஏற்கனவே தெரிஞ்சிருச்சே” என்று கலாய்த்து வரும் ரசிகர்கள்!