இன்று பங்கு சந்தை நிலவரம்!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக பங்கு சந்தை வணிகம் வீழ்ச்சியில் இருந்தது. மருத்துவ சந்தையை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று கட்டுகுள் உள்ள நிலையில் பங்கு சந்தை வணிகம் சற்று ஏற்றம் கண்டு உள்ளது.
இன்று பங்கு சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை உயர்ந்தது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 258.57 புள்ளிகள் உயர்ந்து 52,636.13 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் இருந்து 0.50 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுபோன்று தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73.75 புள்ளிகள் உயர்ந்து 15,770.10 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் இருந்து 0.25 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தர பங்குகளில் 23 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது. அதிகபட்சமாக என்.டி.பி.சி 2.84 சதவீதமும் ஐசிஐசிஐ வங்கி 1.95 சதவிகிதமும், எஸ்.டி.எஃப்.டி 1.81 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 1.49 சதவீதமும் உயர்ந்து காணப்படுகிறது.