ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?

0
199
Stolen stuff in cars that were to be exported! Is it worth it?
Stolen stuff in cars that were to be exported! Is it worth it?

ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?

கப்பலில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த கார்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் 78 கார்களில் மட்டும் பேட்டரிகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அவர்கள் உடனடியாக துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து  அந்த கார்களை இறக்கி விட்டுச் சென்ற லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது  அதில் ஒரு லாரியில் இருந்த பெட்டியில் மட்டும், 78 கார்களில் இருந்து திருடிய,  4 லட்சம் மதிப்பிலான 78 பேட்டரிகளை மறைத்து வைத்திருப்பதை மேற்பார்வை அதிகாரியான  உமாசங்கர் கண்டுபிடித்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த கார்களை கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புவது வழக்கம். எனவே அதற்காக கண்டெய்னர் லாரிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள தனியாருக்கு சொந்தமான துறைமுகங்களுக்கு ஏற்றுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அந்த கார்களில் உள்ள பேட்டரிகளை திருடியதன் காரணமாக அந்த கண்டெய்னர் லாரி டிரைவர்கள் 7 பேரை தற்போது போலீசார் பிடித்து காட்டூர் போலிஸ் நிலையத்தில் துறைமுக அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் (வயது 32,) இளமாறன்(29), பாண்டிகண்ணன் (36), பார்த்திபன் (33), கார்த்திக் (36), சதீஷ்குமார் (27), நிர்மல் (22) ஆகிய 7 கண்டெய்னர் லாரி டிரைவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Previous articleதலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Next articleகமல்ஹாசனின் தேவர் மகன்2 திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா?