நாம் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக குடலில் புழுக்கள் உற்பத்தியாகி தொந்தரவுகள் பல கொடுக்கின்றன.நமது கண்களுக்கு புலப்படாத கிருமிகள் வயிற்றுக்குள் சென்று புழுக்களாக உருவாகிறது.குழந்தைகள,பெரியவர்கள் என்று அனைவரும் குடற்புழு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
குடற்புழுக்கள் வர காரணங்கள்:
1)கைகளை கழுவாமல் உணவு உட்கொள்ளல்
2)சுகாதாரமற்ற குடிநீர் பருகுதல்
3)நன்றாக வேகவைக்கப்படாத உணவுகளை உட்கொள்ளுதல்
குடற்புழுக்கள் வகைகள்:
நாடாப்புழு
கொக்கி புழு
உருளைப்புழு
சாட்டை புழு
வயிற்றில் புழுக்கள் இருந்தால் இந்த அறிகுறிகள் ஏற்படும்:
1)ஆசானாய் பகுதியில் அரிப்பு மற்றும் குடைச்சல்
2)உணவு உட்கொண்ட உடனே மலம் கழிக்க வேண்டுமென்ற உணர்வு
3)உடல் சோர்வு
4)வயிற்று வலி
5)வயிற்றுப்போக்கு
குடற்புழு பிரச்சனை இருந்தால் பூச்சி மாத்திரை சாப்பிட்டு அவற்றை வெளியேற்ற வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.வயற்றில் புழுக்கள் இருந்தால் நாம் உட்கொள்ளும் உணவின் ஊட்டச்சத்துக்களை அவை முழுமையாக உறிஞ்சி எடுத்துவிடும்.
இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு எந்நேரமும் உடல் சோர்வாகவே இருக்கும்.இந்த குடற்புழு பிரச்சனையை பெரும்பாலும் குழந்தைகள்தான் சந்திக்கின்றனர்.குழந்தைகள் அதிகமாக இனிப்பு உணவுகளை உட்கொள்கின்றனர்.கைகளை சுத்தம் செய்யாமல் உணவை எடுத்துக் கொள்கின்றனர்.அதேபோல் பற்களை துலக்காமல் பெரும்பாலும் உணவு சாப்பிடுகின்றனர்.இதனால் குழந்தைகள் வயிற்றில் புழுக்கள் உருவாகி குடைச்சலை உண்டாக்குகிறது.
குடற்புழுக்களை வெளியேற்ற என்ன செய்ய வேண்டும்?
**வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது விளக்கெண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள புழுக்கள் மலத்தில் வந்துவிடும்.
**பூண்டு பல் இரண்டு எடுத்து வாணலியில் போட்டு வறுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடற்புழுக்கள் வெளியேறிவிடும்.
**காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறிவிடும்.
**வேப்பங்கொழுந்து மற்றும் மிளகை ஒன்றாக அரைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து காலை நேரத்தில் பருகினால் குடற்புழுக்கள் வெளியேறிவிடும்.
**பேத்திக்கீரை என்று சொல்லப்படும் அண்ட வாயுக்கீரை கடைந்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்கள்,கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.