வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாக வேண்டுமா? வெந்தயம்  நெய் இரண்டையும் இப்படி பண்ணுங்க! 

Photo of author

By Rupa

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாக வேண்டுமா? வெந்தயம்  நெய் இரண்டையும் இப்படி பண்ணுங்க!
வயிற்று வலி, வயிறு எரிச்சல் போன்ற வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாக வெந்தயம் மற்றும் நெய்யை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பலருக்கும் வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். அதிலும் பெண்களுக்கு அதிகமாக வயிற்று வலி ஏற்படும். அது மட்டுமில்லாமல் அஜீரணம், வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து வகையான பிரச்சனைகளையும் தீர்க்க ஒரே பொருள் வெந்தயம் ஆகும்.
வெந்தயம் வயிற்று சம்பந்தமான பியச்சனைகளை மட்டுமில்லாமல் உடல் சூடு போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யும். இந்த வெந்தயத்தை எவ்வாறு மருந்தாக பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* வெந்தயம்
* நெய்
* மோர்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெந்தயத்தையும் வாணலியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெந்தயத்தை நன்றாக நெய்யில் சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர் ஒரு டம்ளர் அளவு மோர் எடுத்துக் கொள்ளை வேண்டும். வறுத்து வைத்துள்ள இந்த வெந்தயத்தை மோரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்கு கலந்து விட்டு குடிக்கலாம். அல்லது வெந்தயத்தை வறுத்த பின்னர் பொடியாக்கி மோரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.