மோசமான உணவுமுறை,உணவு உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் வயிற்றில் அல்சர் புண்கள் உருவாகிறது.அல்சர் வந்தால் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அல்சரால் ஆசனவாய் பகுதியில் எரிச்சலுடன் மலம் வெளியேறும்.சிலருக்கு வயிறு எரிச்சல் அதிகமாக இருக்கும்.
இந்த அல்சர் புண் பாதிப்புகளை உரிய காலத்தில் குணமாக்கி கொள்ள தவறினால் நிச்சயம் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.அல்சர் புண்களை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.
1)மஞ்சள் கிழங்கு – ஒன்று
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி
முதலில் ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை தோசைக் கல்லில் வைத்து வாசனை வரும் வரை சுட்டெடுக்கவும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த மஞ்சள் தூள் மற்றும் சீர்கத் தூளை அதில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் புண் குணமாகும்.
1)தேங்காய் துருவல் – கால் கப்
2)வெல்லம் – இரண்டு தேக்கரண்டி
முதலில் கால் கப் அளவிற்கு தேங்காயை துருவிக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.பிறகு இரண்டு தேக்கரண்டி வெல்லத்தை அதில் கலந்து பருகி வந்தால் அல்சர் புண் குணமாகும்.
1)தயிர் – ஒரு கப்
2)சோற்றுக்கற்றாழை ஜூஸ் – கால் கப்
ஒரு கப் கெட்டி தயிரில் கால் கப் அளவிற்கு பிரஸ் சோற்றுக்கற்றாழை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பிறகு இதை காலை,மாலை என இருவேளை பருகி வந்தால் அல்சர் புண் குணமாகும்.அதேபோல் மணத்தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் அல்சர் புண் குணமாகும்.
1)கசகசா – ஒரு தேக்கரண்டி
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் கசகசா சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் அல்சர் புண்கள் ஆறிவிடும்.