அடிக்கடி லூஸ்மோஷன் ஏற்பட்டால் உடல் பலவீனமடைந்துவிடும்.தண்ணீர் போன்று வெளியேறும் வயிற்றுப்போக்கு குணமாக சிலருக்கு ஒரு நாள் ஆகும்.சிலருக்கு சில நாட்கள் வரை வயிற்றுப்போக்கு நீடிக்கும்.இந்த மோசமான வயிற்றுப்போக்கை நிறுத்த சிறந்த வீட்டு வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)தாத்தா பூ – ஒன்று
2)கெட்டி தயிர் – கால் கப்
பயன்படுத்தும் முறை:-
முதலில் ஒரு தாத்தா பூவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை கெட்டி தயிரில் போட்டு மிக்ஸ் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
தாத்தா பூவை இப்படி சாப்பிட பிடிக்கத்தவர்கள் அதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து தயிரில் கலந்து பருகலாம்.
தேவையான பொருட்கள்:-
1)சீலியம் பவுடர் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
நார்ச்சத்து நிறைந்த சீலியம் பவுடரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்போக்கு பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆப்பிள் – மூன்று துண்டு
2)ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை
3)ஜாதிக்காய் பொடி – ஒரு சிட்டிகை
4)நெய் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
முதலில் மூன்று துண்டு ஆப்பிளை தோல் நீக்கிவிட்டு ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் சிட்டிகை ஏலக்காய் தூள் மற்றும் சிட்டிகை அளவு ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஆப்பிள் கலவையை போட்டு வதக்கி ஆறவைத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஜாதிக்காய் – சிட்டிகை அளவு
2)வாழைப்பழம் – ஒன்று
3)நெய் – ஒரு தேக்கரண்டி
4)ஏலக்காய் பொடி – சிட்டிகை அளவு
பயன்படுத்தும் முறை:-
முதலில் ஒரு வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு ஜாதிக்காய் பொடி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு வாழைப்பழ கலவையை அதில் போட்டு சிறிது நேரம் வதக்கி ஆறவைத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.