கடப்பா கல்லை திருடிய திமுக பிரமுகர்! இணையத்தில் பரவும் சிசிடிவி காட்சி! நடந்த உண்மை என்ன.?

0
211

கடப்பா கல்லை திருடிய திமுக பிரமுகர்! இணையத்தில் பரவும் சிசிடிவி காட்சி!
நடந்த உண்மை என்ன.?

ஒரு கடைக்கு முன்பாக போட்டிருந்த கடப்பா கல்லை திமுக பிரமுகர் ஒருவர் திருடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் அருகே புதுப்பேட்ட பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கிருஷ்ணன் என்பவர் அதே பகுதியில் கார்ஷெட் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த நள்ளிரவு இவரும் அவரது உறவினர் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது கார்ஷட் இருக்கும் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் கடை ஒன்றின் முன்பு அமருவதற்காக கடப்பா கல் போடப்பட்டிருந்தது.

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணனும் அவரது உறவினரும் அந்த கடைக்கு முன்பு வாகனத்தை நிறுத்தி சுற்றி பார்த்துவிட்டு திடீரென உட்காரவைத்திருந்த கடப்பா கல்லை தூக்கி பைக்கில் வைத்து எடுத்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இச்சம்பவம் பற்றி கிருஷ்ணன் பேசியதாவது; போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கல்லை எடுத்து பக்கத்தில் வைத்தேன். அதை நான் எடுத்துச் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், கல்லை எடுத்து வைத்தது நான்தான் என்று தெரியாமல் கடைக்கு சொந்தக்காரர் அந்த சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளார். இதன்பிறகு என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். இது மட்டுமல்லாமல் நான் தற்போது திமுக வில் எந்த பொறுப்பிலும் இல்லை. என்னை பிடிக்காத நபர்கள் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ஊறினார்.

Previous articleபிரிந்து கிடந்த நண்பர்கள் சேர்ந்து செய்த பிரியாணி விருந்து : சொந்த செலவில் சூன்யம் வைத்து கொண்ட பரிதாபம்..!!
Next articleகொரோனா தொற்று 25 லட்சத்தை நெருங்குகிறது : பதற வைக்கும் பட்டியல்!