கற்களால் தாக்கப்பட்ட திமுக வேட்பாளர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது அதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு வேட்புமனு தாக்கல் என்று அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளே துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்பு மனு தாக்கலை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் செலுத்தி இருக்கின்றார். அவர் ஏற்கனவே சட்டசபை உறுப்பினராக இருப்பதும் இதே போடிநாயக்கனூர் தொகுதியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக இந்த தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட இருக்கின்றார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். அதேபோல அதிமுக அதைச் சார்ந்த பலர் நேற்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்வதை தொடங்கிவிட்டார்கள்.

ஆளும் கட்சியான அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக தொடங்கியிருக்கும் நிலையில்,திமுகவில் நேற்றுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதிலும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததாக சொல்கிறார்கள்.ஆகவே தான் கடைசி நேரத்தில் அந்த கட்சி வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்திருக்கிறது. அந்தப் பட்டியலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மறுபடியும் களம் காண இருக்கிறார். அதேபோல திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் களம் இறங்க இருக்கிறார்.

அதேபோல இந்த வேட்பாளர் பட்டியலில் திமுகவைச் சார்ந்த பலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், தெரிய வந்திருக்கிறது. அதன் காரணமாக அந்த கட்சியை சார்ந்த முக்கிய நபர்கள் பலர் ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

திமுக சார்ந்த பல சீனியர்கள் ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் இருக்கும் சமயத்தில் திமுக சார்பாக விருகம்பாக்கம் தொகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா வின் மகன் பிரபாகர் ராஜா வேட்பாளராக நிறுத்தபட்டு இருக்கிறார். இதனால் விருகம்பாக்கம் தொகுதியில் திமுகவைச் சார்ந்த தனசேகரன் என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப் படாத காரணத்தால், அவர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், விருகம்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இருக்கும் பிரபாகரன் ராஜா தனசேகரன் இல்லத்துக்கு ஆதரவு கேட்க சென்ற சமயத்தில் அந்த பகுதியில் சென்றபோது தனசேகரன் ஆதரவாளர்கள் பிரபாகரன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இந்த விவகாரம் திமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அறிவாலயத்திற்கு விரைந்த பிரபாகரன் ராஜா வேட்பாளரை மாற்றுவதற்கான மனுவை கொடுத்திருக்கின்றார். தலைமை தன்னுடைய மனுவை ஆலோசனை செய்து வேட்பாளரை மாற்றும் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில், மற்றும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால் விருகம்பாக்கம் தொகுதியில் செல்வாக்குமிக்க ஒரு நபராக தனசேகரன் இருந்தாலும் கூட அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் வெற்றியை பறிகொடுத்தார், அதேபோல கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெறும் 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோல்வியை தழுவினார் என்று சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்த ஸ்டாலின் இதன் காரணமாக தான் விருகம்பாக்கம் தொகுதியில் தனசேகருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு மறுத்து வேறொரு நபரை நிறுத்தி இருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் ஸ்டாலினின் இந்த செயலால் தனசேகரன் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.