வயிற்றுப்போக்கு பிரச்சனை சரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பொட்டுக்கடலை
2)பேரிச்சம் பழம்
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு தரமான பேரிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பேரிச்சையின் விதையை நீக்கிவிட்டு அதில் சிறிதளவு பொட்டுக்கடலை வைத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
**வயிற்றுப்போக்கு நிற்க ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)அத்திப்பழம்
செய்முறை விளக்கம்:-
இரண்டு உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை சரியாகும்.இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலை குளிர்ச்சியாக்கும் இயற்கை பானங்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம்
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றை எடுத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.இந்த வெந்தயத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)தயிர் – ஒரு கப்
2)வெந்தயப் பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு கிண்ணத்தில் பசுந்தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயப் பொடி போட்டு மிக்ஸ் செய்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கிராம்பு – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு கிராம்பு போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
இந்த கிராம்பு பானத்தை குடித்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகும்.