இனி 4ஜி ஃபோன்கள் விற்பனை நிறுத்தம்! விளக்கம் அளிக்கும் மத்திய அரசு!

Photo of author

By Rupa

இனி 4ஜி ஃபோன்கள் விற்பனை நிறுத்தம்! விளக்கம் அளிக்கும் மத்திய அரசு!

Rupa

Stop selling 4G phones! Central government to explain!

இனி 4ஜி ஃபோன்கள் விற்பனை நிறுத்தம்! விளக்கம் அளிக்கும் மத்திய அரசு!

5ஜி சேவையை நாடு முழுவதும் உபயோகிக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த 5ஜி சேவையானது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே தற்பொழுது நடைமுறையில் உள்ளது.அவ்வாறு தமிழகத்தில் சென்னை மற்றும் இதர மாநிலங்களான டெல்லி, மும்பை ,பெங்களூர் ,ஹைதராபாத் என எட்டு நகரங்களில் தற்போது நடைமுறையில் உள்ளது. 5ஜி செல்போன் உபயோகம் செய்பவர்கள் இதற்காக சிம் கார்டு எதுவும் மாற்றத் தேவையில்லை என தெரிவித்தனர். அதிகப்படியானோர் 5ஜி உபயோக்கிக்க வேண்டும் என்ற பட்சத்தில் 4ஜி, 3ஜி ஆகிய ஸ்மார்ட் போன் தயாரிப்பதை நிறுத்தும்படியாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக பல தகவல்கள் வெளிவந்தது.

ஆனால் இது குறித்து தெளிவான விளக்கத்தை மத்திய அரசு அளித்துள்ளது. நாங்கள் 4ஜி,3ஜி  போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பதை நிறுத்தம் செய்ய சொல்லவில்லை, இது பொய்யான தகவல். அவ்வாறான உத்தரவை தற்பொழுது வரை நாங்கள் அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் டெல்லியில் மத்திய தொலைதொடர் செயலாளர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 5ஜி சேவை  வெளியிட்ட நிலையில் அதனை உபயோகப்படுத்தும் வகையான மென்பொருள் அப்டேட் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.