ஆண்களிடையே காணப்படும் புகைபிடித்தல்,உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிக மோசமான பழக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது.இந்த புகைப்பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய்,வாய் புற்றுநோய் போன்றவை உருவாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே புகைப்பழக்கத்தில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
1)நெல்லிக்காய் – ஒன்று
2)குப்பைமேனி இலை – இரண்டு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி
முதலில் ஒரு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு குப்பைமேனி இலையை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு மிக்சர் ஜாரில் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுக்க வேண்டும்.பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை அதில் கலந்து சாப்பிடுங்ககள்.
தொடர்ந்து 48 தினங்கள் இந்த வைத்தியத்தை செய்து வந்தால் புகைப்பழக்கத்தில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.
1)அன்னாசி பழம் – கால் கப்
2)சீரகம் – அரை தேக்கரண்டி
3)மிளகு – அரை தேக்கரண்டி
முதலில் அன்னாசி பழத்தின் தோலை நீக்கிவிட்டு கால் கப் அளவிற்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரை தேக்கரண்டி சீரகம் மற்றும் அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி சாப்பிட்டு வந்தால் புகைப்பழக்கத்தில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.
1)தும்பை பூ – ஒரு தேக்கரண்டி
2)தும்பை இலை – ஒரு தேக்கரண்டி
தெருவோரங்களில் வளரும் தும்பை பூ மற்றும் தும்பை இலையை சொல்லப்பட்டுள்ள அளவுபடி பறித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி தும்பை இலை மற்றும் தும்பை பூவை போட்டு கொதிக்க வைத்து கசாயம் போல் பருகி வந்தால் புகைப்பழக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
1)முள்ளங்கி – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
ஒரு சிறிய சைஸ் முள்ளங்கியை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு தேக்கரண்டி தேனை முள்ளங்கி சாறில் கலந்து பருகினால் புகைப்பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கும்.