STOP SMOKING: சிகிரெட் பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக கைவிட உதவும் மூலிகை மருத்துவம்!!

Photo of author

By Divya

STOP SMOKING: சிகிரெட் பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக கைவிட உதவும் மூலிகை மருத்துவம்!!

மனிதர்கள் ஒரு சில கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள் என்றால் அவர்களை அதிலிருந்து மீட்டு கொண்டுவருவது என்பது எளிதற்ற ஒன்றாக மாறிவிடும்.அதிலும் புற்றுநோயை உண்டாக்கும் புகை பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது என்பது மிகவும் கடினம்.

புகைப்பழக்கத்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோய் பாத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்த கொடிய பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றி வந்தால் அதிலிருந்து எளிதில் மீண்டு விடலாம்.

1)தும்பை பூ வேர்
2)அதிமதுரப் பொடி
3)இஞ்சி
4)பட்டை

செய்முறை:-

50 கிராம் அளவு தும்பை பூ வேர் எடுத்து தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள தும்பை பூ வேர்,ஒரு தேக்கரண்டி அதிமதுரப் பொடி,இடித்த இஞ்சி மற்றும் ஒரு துண்டு பட்டை போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் புகை பழக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)வசம்புப் பொடி
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி வசம்புப் பொடி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் புகை பழக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)இலவங்கம்
2)புதினா

செய்முறை:-

ஒரு கிளாஸ் அளவு நீரில் இரண்டு இலவங்கம் மற்றும் 3 புதினா இலைகளை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் புகை பழக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.