கிடப்பில் கிடக்கும் STR 48!! தயாரிப்பினை கைவிட்டாரா கமலஹாசன்!!

Photo of author

By Gayathri

கமலஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு – வைக் கொண்டு உருவாக்க நினைத்த படம் தான் STR 48. இந்நிலையில் இந்த படத்தினை விட்டு கமலஹாசன் அவர்கள் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சினமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தயாரிப்பில் வெளியான “விக்ரம்” படம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தது. மேலும் ரசிகர்களிடையேவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து கமலஹாசன் அவர்கள் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தை தயாரித்துள்ளார். மேலும் தீபாவளியான இன்று அமரன் படம் உலகம் முழுவதிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் படத்தை தொடர்ந்து சிம்புவின் 48வது படத்தையும் தான் தயாரிக்க உள்ளதாக கமலஹாசன் ஒன்றரை வருடங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். மேலும் இப்படத்தினை இயக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தினை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் இதில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த படத்தின் டீசரை வெளியிட்டு அதனை உறுதியும் செய்தனர்.

ஆனால், இப்படத்திற்கு பின் சிம்பு இரண்டு படத்திற்கு கமிட் ஆகி அதில் ஒரு படத்தில் நடித்த முடித்து விட்டார். எனினும் சிம்புவின் 48 வது படம் குறித்த அப்டேட் வரவில்லை. பின்னர் கமலஹாசன் அவர்கள் இப்படத்திலிருந்து விலகி விட்டார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு அவர் 5 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் என்றும் அந்த பணத்தினை சிம்பு அவருக்கு திருப்பி கொடுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் STR 48 ஐ எஸ் டி ஆர் ஏ தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.