உங்களில் பலர் சில நேரம் நரம்பு சுருட்டல் பிரச்சனையை சந்தித்திருப்பீர்கள்.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ட்ரை பண்ணுங்க.
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு உலர் திராட்சை – 10
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றை எடுத்து அதில் 10 உலர் திராட்சை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.இந்த உலர் திராட்சை பானத்தை மறுநாள் காலையில் பருகிவிட்டு உலர் திராட்சையை மென்று சாப்பிட வேண்டும்.
இல்லையேல் இந்த உலர் திராட்சையை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் கலந்து பருகலாம்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நரம்பு சுருட்டல்,நரம்பு தளர்ச்சி பிரச்சனை முழுமையாக குணமாகும்.
நரம்பு சுருட்டல் குணமாக மற்றொரு வீட்டு வைத்தியம்:-
1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
3)துளசி இலைகள் – 20
4)வசம்புத் தூள் – கால் தேக்கரண்டி
கிண்ணத்தில் மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.
பிறகு துளசி இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை மஞ்சள் தூளில் போட்டு கலக்குங்கள்.
அதன் பிறகு கால் தேக்கரண்டி வசம்புத் தூளை கொட்டி கலக்குங்கள்.இந்த கலவையை நரம்பு சுருட்டல் மீது பற்றுப்போட்டு வந்தால் அவை சீக்கிரமாக குணமாகும்.