இரண்டு மூக்குடன் பிறந்த விசித்திர குழந்தை!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

Photo of author

By CineDesk

இரண்டு மூக்குடன் பிறந்த விசித்திர குழந்தை!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர் காந்தா என்னும் மாவட்டத்தில் அனைவரும் பார்த்து வியக்கும் படியாக அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதாவது, இரண்டு மூக்குகள் கொண்ட ஒரு குழந்தையை பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.

இதை பார்த்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த குழந்தை ஹிம்மத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்தது.

பிறகு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாக கூறி உள்ளனர்.

ஒவ்வொரு எட்டாயிரம் முதல் பதினைந்து ஆயிரம் குழந்தைகளில் ஒருவர் இவ்வாறு அதிசய குழந்தையாக பிறக்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

எனவே, தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள பெண்மணி இரண்டு மூக்கு கொண்ட ஒரு விசித்திர குழந்தையை பெற்றெடுத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இந்த குழந்தையை விசித்திரமாக பார்த்து வருகின்றனர். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் இது குறித்து வியப்புடன் இருக்கின்றனர்.

நாட்டில் இதுபோன்று பல இடங்களில் விசித்திர சம்பவம் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு ஒரு மாநிலத்தில் பெண்மணி ஒருவர் நான்கு கைகள், நான்கு கால்கள், இரு இதயங்கள் முதலியவற்றுடன் ஒரு குழுந்தையை பெற்றெடுத்தார்.

அந்த வரிசையில், விசித்திரமான குழந்தையை பெற்றெடுத்த சம்பவத்தில் தற்போது இந்த நிகழ்வும் சேர்ந்துள்ளது.