உண்ணக் கூட மறந்து 300 நாட்கள் தூங்கி கழிக்கும் வினோத மனிதர்!
கும்பகர்ணன் என்னும் பெயர் ராமாயணத்தில் நன்கு பரிட்சய பட்டப் பெயராக இருக்கும் காரணம்! என்னவென்றால் கும்பகர்ணனின் ஆழ்ந்த தூக்கம்தான்.அதுதான் அவரது அடையாளமாக விளங்கும் புராணகாலத்தில் அப்படியொரு பாத்திரம் இருந்ததோ இல்லையோ ஆனால் கலியுகமான நிகழ்காலத்தில் கும்பகர்ணனை விடவும் அதிக காலம் தூங்கும் ஒரு நபர் இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்! கும்பகர்ணனாவது முதல் ஆறு மாதம் தூங்குவது மீதி ஆறு மாதம் உண்பது என ஆண்டை கழிப்பார்.
ஆனால் இந்த நபரோ உண்பதற்கு கூட எழுந்திருக்காமல் வருடத்தில் 300 நாட்களும் தூங்குவார் என்பதுதான் ஆச்சரியப்பட வைக்கும் உண்மை! இப்படி அந்த நபர் நாட்கணக்கில் தூங்குவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்வோம். அந்த நபரின் பெயர் புர்காராம் இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்தவர் இவரது தற்போதைய வயது 42 இவர் வருடம் 300 நாட்களிலும் தூங்கியே கழிக்கிறார். இவரது தொழில் பலசரக்கு கடை நடத்திவருகிறார் இந்த அதீத தூக்கமே இவருக்கு மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் இவர் ஒரு நாள் இரண்டு நாள் பிறகு ஒரு வாரம் என்று தொடங்கிய இவரது தூக்கம் ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் என நீண்டுகொண்டே சென்றுள்ளது .இதனால் மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தன்னுடைய பலசரக்குக் கடையை திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் புர்காரார்.
தனது கணவனின் இந்த வினோதமான தூக்கம் விசித்திரமான செயல்பாடுகளால் அதிர்ச்சியடைந்த புர்காராமின் மனைவி அவரை மருத்துவமனைக்குக் கூட்டி சென்றுச் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவர் சொன்ன ஆச்சரியம்! என்னவென்றால் புர்காராவிற்கு ஆக்சிஸ் ஹைப்பர் சோமியா என்னும் வினோத நோய் பாதிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர் கூறியிருக்கிறார். அதாவது ஆக்சிஸ் ஹைபர் சோமியா என்பது வினோதமான நோய் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கத்திலிருந்து எழ முயற்சி செய்தாலும் அவர்களின் உடல் ஒத்துழைக்காது மேலும், அவர்கள் தூக்கம் வருவதற்கு முன்பாகவே கடும் தலைவலியால் பாதிக்கப்படுவார்கள்.
இந்த வகையான நோய்களை குணப்படுத்துவது எளிதான காரியமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் புர்காராம் நாட்கணக்கில் தூங்குவது எல்லாம் இந்த ஆண்டு சென்ற ஆண்டு நிகழ்ந்தது அல்ல இவர் சுமார் 23 ஆண்டுகளாகவே இந்த வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அவரை நம்பி வாழும் தாயார் மற்றும் தனது மனைவி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். இப்படி மெய்மறந்து தூங்கும் புர்காராம் உண்பது எல்லாமே தூக்கத்தில் தான்.