8 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வினோத மனிதர்!

0
81

8 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வினோத மனிதர்!

கடந்த ஆண்டு இந்தியாவில் நுழைந்து வேகமாக பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறிக் கொண்டிருருந்த நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பரவும் வேகத்தை குறைப்பதற்காகவும் தடுப்பூசிகளை அறிமுகபடுத்தி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதை இரண்டு தவணைகளாக போட்டுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் நோயின் தாக்கத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் தற்போது  ஒவ்வொருவராக தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாட்டில் கொரோனாவின் உருமாறிய புதிய வகை தொற்றான ஒமிக்ரான் தற்போது நாடெங்கும் பரவி வரும் நிலையில் அதை கட்டுபடுத்துவதற்காக நாட்டு மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவி டவுன் சார்லிராய் நகரை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவுக்கு பயந்து அதனிடமிருந்து தப்பிக்க 8 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார். இந்த நிலையில் 9-வது முறையாகவும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அந்த நபர் தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் தவறாக இருப்பதை அறிந்த மருத்துவ ஊழியர்கள் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில் அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் ஏற்கனவே இவ்வாறு போலி ஆவணம் மூலம் 8 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது தெரியவரவே உடனே இது குறித்து போலீஸ்க்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் அந்த வினோத நபரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.