இரண்டாம் குத்து படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு! இயக்குனர் கைதாவாரா?

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி, நடிக்கும் படம்தான் இரண்டாம் குத்து. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் என  வெளிவந்த அனைத்தும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அசராமல் இருக்கிறார் சந்தோஷ். இந்த வகையில் தற்போது ரேஸரும் நடிகையுமான அலிஷா அப்துல்லா இரண்டாம் குத்து படத்தை பற்றி ட்வீட் போட்டுள்ளார்.

அதில் அவர், ‘இரண்டாம் குத்து ட்ரெய்லரை தற்போது தான் பார்த்தேன். இது போன்ற படங்கள் எடுக்கபடுவதை பார்க்க ஒரு மாதிரியாக இருக்கிறது. இது போன்ற படங்களை எப்படி ரிலீஸ் செய்யலாம்? இதுபோன்ற படங்களுக்கு தடை விதிக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக மூத்த இயக்குனர் பாரதிராஜா இரண்டாம் குத்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போது சந்தோஷ் பி ஜெயக்குமார் பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக் படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு  தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

மேலும் தற்போது இதற்கு சந்தோஷ், பாரதிராஜா அவர்களிடம் தனது மன்னிப்பை தெரிவித்திருக்கிறார்.

https://twitter.com/alishaabdullah/status/1314640698340065280?s=20