ஆன்லைன் வகுப்பு விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:! தமிழக அரசு உறுதி!

0
108

ஆன்லைன் வகுப்பு விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:! தமிழக அரசு உறுதி!

ஆன்லைன் வகுப்பில் விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிபடக் கூறி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக,கல்வி நிறுவனங்களை இயக்கப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மாணவர்களின்,கல்வி மேம்பாட்டு திறனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு,ஆன்லைன் வகுப்பு மூலமாகவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு, தொலைக்காட்சி மூலமாகவும், கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.ஆன்லைன் வகுப்பினால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளதை கண்டித்து ஆன்லைன் வகுப்பை
தடைசெய்யக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆன்லைன் வகுப்பு விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,ஆன்லைன் வகுப்பில் பள்ளிகள் சரியான விதிமுறைகளை பின்பற்றுகின்றனவா என்பதனை கண்காணிக்க குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும்,மாணவரின் நலன் காப்பது அனைவரின் பொறுப்பு என்றும் நீதிபதிகள் கூறினர்.

 

 

 

Previous articleசென்னை அணி வீரர்களுக்கு 3-ம் கட்ட பரிசோதனை
Next articleவடகொரிய அதிபரின் சகோதரி மர்மம்