மதுப்பிரியர்களே உஷார்.. இனி இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்தால் கடும் நடவடிக்கை!!   

Photo of author

By Rupa

மதுப்பிரியர்களே உஷார்.. இனி இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்தால் கடும் நடவடிக்கை!!

மதுபான கடைகளில் தொடர்ந்து பல ஊழல்கள் நடப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த வண்ணமாக தான் உள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜி கைதுக்கும் முன் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்ததாக ஆதாரத்துடன் பல வீடியோக்கள் வெளிவந்தது. இதனையெல்லாம் தடுக்கும் வகையில் தமிழக அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தற்போது வரை பாட்டிலுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பது இருந்து கொண்டேதான் உள்ளது.

அதுமட்டுமின்றி தொகுப்பூதியம் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களது வேலை நேரத்தில் தாமதமாக வருவதாகவும் அல்லது வர இயலவில்லை என்றால் தங்களது உறவினர் நண்பர் போன்றோரை அன்று ஒரு நாள் முழுவதும் தனது பணியை செய்யுமாறு கூறுவதாக பல புகார்கள் வந்துள்ளது. இதன் உண்மை தன்மையை அறியும் பொருட்டு தமிழக அரசு அவ்வபோது மதுபான கடைகளில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேற்கொண்டு பணி நேரத்தில் இல்லாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட மேலாளர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பணி நேரத்தில் அமர்த்தப்படும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் பாட்டிலுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்து விற்று விடுகின்றனர். இந்த கூடுதல் பணத்தை வைத்து தான் இவர்களுக்கு ஒரு நாள் கூலியவே வழங்குகின்றனர். கிட்டத்தட்ட ஒரு நாளில் இதன் மூலமாகவே இவர்களுக்கு 500 முதல் 1000 ரூபாய் சர்வ சாதாரணமாக கிடைக்கிறதாம்.

ஒப்பந்த ஊதியத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியருக்கும் சம்பளம் அதே போல அவரது நண்பர் அல்லது உறவினருக்கும் இதன்மூலம் சம்பளம் என்று இரு லாபம் பார்ப்பதாக கூறுகின்றனர். இவாறான புகார் மாவட்டந்தோறும் இருந்து வருவதால் இதுகுறித்து தீவீர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.