இளைய தலைமுறையை அச்சுறுத்தும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு!! அறிகுறிகள் மற்றும் உரிய தீர்வுகள்!!

Photo of author

By Gayathri

தற்போதைய காலகட்டத்தில் வயதானவர்களுக்கு இணையான நோய் பாதிப்புகளை இளையத் தலைமுறையினர் சந்தித்து வருவது கசப்பான உண்மையாக இருக்கிறது.குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பரவலாக காணப்படுகிறது.

இப்பொழுது வரும் மாரடைப்பால் அடுத்த நொடியே உயிர் போவதால் இளைய தலைமுறையினர் மத்தியில் இது அச்சம் ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.நன்றாக இருக்கும் ஒருவருக்கு இப்படி மாரடைப்பு,பக்கவாதம் வருவதால் நடுத்தர வயதினர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

பக்கவாதம் 60 வயதை கடந்தவர்களுக்கு வருவது வழக்கம்.ஆனால் தற்போதைய மோசமான வாழ்க்கைமுறையால் நடுத்தர வயதினர் இந்த பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இந்த பாகவத நோயானது ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கிறது.

நமது உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மூளைக்கு செல்லும் நரம்புகளில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.இது அறிவாற்றலை பாதிப்பதோடு நரம்பியல் செயலிழப்பிற்கு வழிவகுக்கிறது.பக்கவாதம் 80% காப்பாற்றப்பட கூடிய நோய் பாதிப்பாகும்.மாரடைப்பு போன்றே பக்கவாதம் யாருக்கு எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது.

ஆனால் சில அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே பக்கவாதம் வருவதை கண்டறிய முடியும்.உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பக்கவாதம் வரக் கூடும்.நீரிழிவு நோயாளிகளுக்கு பக்கவாதம் வர வாய்ப்பிருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.உடல் பருமன்,புகை பிடித்தல்,மது அருந்துதல் போன்றவற்றாலும் பக்கவாதம் ஏற்படும்.

திடீர் தலைசுற்றல்,கண் பார்வை குறைபாடு,கைகளில் உணர்வின்மை தன்மை,பேச்சில் தடுமாற்றம் போன்றவை பக்கவாதத்திற்கான அறிகுறிகளாகும்.இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.