கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு 

0
245
#image_title
கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 ணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக நேற்று முன்தினம் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதனை தொடர்ந்து வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தன. இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறையின் 12 மணி நேர வேலை திருத்த சட்ட செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் நலத்துறையின் சட்ட முன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும், தொழிலாளர் நலன் காக்கப்பட்டதால் தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட்டு வந்துள்ளது. தற்போதும் அதே சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே மாநில அரசு செயல்பட்டு வருகிறது.
சட்டங்கள் குறித்த மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநில அரசு செயல்படுகிறது. அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழக எதிர் கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில், தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல சுவிட்ச் போட்டவுடன் வேலை செய்வதற்கு, எனவே தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Previous articleரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஓர் அறிய செய்தி! 
Next articleகுடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம்!